குழந்தை பருவம்


 குழந்தை பருவம்

கோவில் கருவறையில் இருக்கும் கடவுளை என்றாவது ஒரு நாள் நேரில் பார்த்தது உண்டா. அனால் ஒரு பெண்ணின் கருவறையில் இருக்கும் ஜீவனை நாம் பூமிக்கு அழைத்து வர முடிகிறது குழைந்தையாக. 

அதனால் கடவுள் மறுப்பாளன் என எண்ணி விட வேண்டாம். பூமிக்கு வரும் முன் கருவறையில் குழந்தை விளையாடி கொண்டிருந்தது அந்த கடவுள் எனும் தாயிடம் தான். எனவே தான் குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் குழந்தையின் தூக்கத்தில் சிரிப்பையும் காண்கிறோம்.

பெற்றோர்க்கு முதல் 12 மாதங்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரிக்கும் தருணங்கள்:

 image credit: shutter stock
முதல் மூன்று மாதங்கள் : 
கொஞ்சலும் தூக்கமும் உணவுமாக குழந்தை பிறந்த தருணத்தையே நினைத்து ஆனந்தம் அடையும் தாய். சாதித்து விட்ட சந்தோஷத்தில் தகப்பன்.
குழந்தை அழுதே பார்த்த தாய்க்கு முதன் முதலில் மழலை பிதற்றும் மொழி கேட்கிறாள் கண்ணால் உடல் அசைவை ரசிக்கிறாள்.
குழந்தை தன்னை தாய் என புரிந்து கொண்டதாக உணர்கிறாள் தன்னை நோக்கி சிரிப்பதையும் கண்டு ஆனந்த படுகிறாள். 

நான்கு முதல் ஆறு வரை : 
தாய் பேசுவதை காதால் கேட்டு தொடுதலின் உணர்வையும் அறிந்து உடலை நகர்த்த முயற்சி செய்யும் குழந்தை பார்க்க பார்க்க ஆனந்தமே.
குழந்தை அமர துடிக்கும் தருணம் அதற்கு உறுதுணையாய் நிற்கும் தாய். பாலையே உணவாக கொண்ட குழைந்தைக்கு மாற்று உணவை தேடும் மனம்.
என்ன இது என்ன இது என்று தன்னை சுற்றி இருக்கும் பொருள் துணி உயிர் என அனைத்தையும் உணர முற்படும் குழந்தை மனம். வார்த்தை சொல்ல ஆரம்பிக்கும் முதல் தருணம்.

ஏழு முதல் ஒன்பது வரை:
தன்னை சுற்றி உள்ள முதல் உலகத்தை குடும்ப உறுப்பினர்களை அடையாளம் கொண்ட குழந்தை தனக்கு புடிக்கிற புது உணவை ருசிக்கும் தருணம். அழுகையில் அம்மா என்ற வார்த்தை ஒலிக்க அனைவருக்கும் ஆனந்தமே.
தவள , எல , நடக்க என ஓவவ்ரு நொடியும் குழந்தை முயற்சி செய்வதை ரசித்து அதற்கு ஊக்க படுத்தவே தாய்க்கு நேரம் சரியாக போய்விடும்.
ஒரு நிலையான பாசத்தையும் பந்தத்தையும் உங்களிடமும் உங்களை சுற்றி உள்ள தனக்கு புடித்த மனிதர்களிடம் ஏற்படுத்தும்.

பத்து முதல் பனிரெண்டு வரை :
பத்து மாத குழந்தை மிகவும் சுறுசுறுப்பாகவும் அதை விரட்டி கொண்டிருப்பதே தாய்க்கு வேலையாகி போய்விடும். குழந்தையின் அறிவு தன்மையும் வெளிப்படும்.
குழந்தை கிட்டத்தட்ட தளர்நடை பருவத்தை எட்டி விடும். உங்கள் வீட்டிற்குள் உலா வருவதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். பெற்றோர்கள் பெருமூச்சு விடும் தருணம்.
குழந்தை தளர்நடை பருவத்தை எட்டிவிட்ட தருணம் தனது முதல் அடியெடுத்து வைத்து அம்மா அப்பா எனக்கு புடிக்கும் என சொல்ல கேட்கும் ஒவ்வரு பெற்றோருக்கும் ஆனந்தமே.

இப்படியாய் பேணி பேணி பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட நம்மை இளமை பருவம் இச்சமூகத்தால் வளர்க்கப்படுகிறது. 

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்பதிலே என்பது பழைய தத்துவம்

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் சமூகம் வளர்பதிலே என்பது தான் இன்றைய தத்துவம்

உங்கள் குழந்தை பருவத்தை எண்ணியாவது நம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை தவிர்ப்போம்.

ஒரு உள்ளம் மாறினாலும் அவ்வுள்ளம் இக்கூற்றை பரப்பும் என்ற நம்பிக்கையுடன்

தொடர்வோம்….


Comments

Popular posts from this blog

Amazon Pay எதற்காக?

UPI - Unified Payments Interface எதற்க்காக?